மின்தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகளை நிறுவுதல், பராமரித்தல், ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்கான அங்கீகாரமளித்தல்.*REQUIREMENTS FOR AUTHORIZATION FOR ERECTION, MAINTENANCE, INSPECTION AND TESTING OF LIFTS OR ESCALATORS
மின்தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகளை நிறுவுதல், பராமரித்தல், ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்கான அங்கீகாரமளித்தல்.
அங்கீகாரம் பெறுவதற்காகத் தேவைப்படுபவை - தமிழ்நாடு 1997 ஆம் ஆண்டு மின்தூக்கிகள் மற்றும் இயங்கும் படிக்கட்டு அமைப்பு விதிகளைச் சேர்ந்த 13 ஆம் விதியின் வரம்பு நிபந்தனைகளின் கீழ், நேர்விற்கேற்ப மின்தூக்கிகள் அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்பை நிறுவுதல் பராமரித்தல், ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பத்தைனை பின் வரும் அளவுகோல்களை நிறைவேற்றும் நபரால் உரிய வரைறுக்கப்பட்ட கட்டணத்துடன் (இ-செலான்) படிவம் “J” இல் விண்ணப்பிக்க வேண்டும்.
- தமிழ்நாடு மாநிலத்தில் தனி நபருக்குரிய வகையில் தொலைபேசி இணைப்பு பெற்று தனியாக அலுவலக வளாகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் ருபாய் எட்டு இலட்சம் அளவிற்குத் தொடர்ந்து கடன் தீர்க்க வகையுடையவர் என யாதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஒன்றை அளிக்க வேண்டும்.
- தன்னுடைய தொழிலில் பின்வரும் குறைந்தளவிலான பணியாளர்களையாவது பணியமர்த்தம் செய்திருக்க வேண்டும் (பணிநியமனக் கடிதத்தின் இணைக்கப்பட வேண்டும்)
(a) நேர்விற்கேற்ப,
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து இயந்திரப் பொறியியல் பட்டப் படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் மின் தூக்கிகள் அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகள் செயல்பாட்டில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்கும் குறைந்தபட்சம் ஒரு பொறியாளர்
- நேர்விற்கேற்ப, அங்கீக்ரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து இயந்திரப் பொறியியல் பட்டயப் படிப்புடன் மின்தூக்கிகள் அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகள் செயல்பாட்டில் எட்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்கும் குறைந்தபட்சம் ஒரு பொறியாளர்.
(b) நேர்விற்கேற்ப,
- அங்கீக்ரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப் படிப்பு அல்லதுஅதற்கு இணையான கல்வித் தகுதியுடன் மின் தூக்கிகள் அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகள் செல்பாட்டில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் மனுபவம் பெற்றிருக்கும் குறைந்தபட்சம் ஒரு பொறியாளர்
- நேற்விற்கேற்ப, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து மின் பொறியியல் பட்டயப் படிப்புடன் மின் தூக்கிகள் அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகள் செயல்பாட்டில் எட்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்கும் குறைந்தபட்சம் ஒரு பொறியாளர்,
(c) நேர்விற்கேற்ப, தொழிற்பயிற்சி நிறுவனம் அல்லது ஏனைய பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து ‘மின் அல்லது மின்னணு தொழிலில்’ படிப்புக்கான சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியத்தால் வழங்கப்பட்ட மின்கம்மியர் தகுதிச் சான்றிதழ் மற்றும் மின் தூக்கிகள் அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகள் செயல்பாட்டில் ஐந்து ஆண்டுகளுக்குக்குறையாமல் அனுபவம் வெற்றிருக்கும் குறைந்தபட்சம் அரு பொறியாளர்.
(d) ஓராண்டில் நிறுவப்பட வேண்டிய ஒவ்வொரு பத்துப் புது மின் தூக்கிகள் / இயங்கும் படிக்கட்டு அமைப்புகள் நிறுவுவதற்காகத் தொழிற்பயிற்சி நிறுவன மின் வினைஞர் ஒருவர், தொழிற்பயிற்சி நிறுவன பொருத்தர் ஒருவர் மற்றும் உதவியாள் ஒருவர் ஆகியோர் நிறுவும் பணியாளகளாக இருக்க வேண்டுமம்.
(e) ஓராண்டில் பராமரிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு ஐம்பது புது மின் தூக்கிகள் / இயங்கும் படிக்கட்டு அமைப்புகளை நிறுவுவதற்காகத் தொழிற்பயிற்சி நிறுவன மின் வினிஞர் ஒருவர், தொழிற்பயிற்சி நிறுவன பொருத்தர் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவர் ஆகியோர் பராமரிக்கும் பணியாளர்களாக இருக்க வேண்டும் மற்றும்
(f) உரிமையாளர்களிடமிருந்து வரும் புகார் குறித்த அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டி எப்போதும் சேவை நிலையத்தி ஒரு எழுத்தர் / பணியாள் இருக்க வேண்டும்.
- ஒருவர், தனிப்பட்ட வசதிகளுடன் குறைந்தது 100 சதுர மீட்டர் பரப்பளவு இடம், தொலைபேசி இணைப்பு மற்றும் குறைந்தது 15 பரிதிறன் கொண்ட தனி மின் இணைப்புடன் அமைந்த சொந்தமான பணிமனையைத் தமிழ்நாடு மாநிலத்திற்குள் வைத்திருக்க வேண்டும். அத்தகைய பணிமனை பின்வரும் குறைந்தளவு இயந்திரங்கள் மற்றும் நிலையிருப்பாக அல்லது இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான கருவிகளுடன் அமைந்ததாக இருக்க வேண்டும்.
(a) கடைசல் பொறி
(b) துறையிடும் கருவி
(c) 5 அல்லது அதற்கும் அதிகமான திறனுடைய பற்றவைக்கும் கருவி
(d) உலோகங்களை அறுக்கும் ரம்பம்
(e) 3 டன் திறன் கொண்ட சங்கிலி இழவை தொகுதி
(f) நிலையான எடையுடைய தள்ளுவண்டி
(g) வோல்டேஜ், மின்சாரம் போன்றவற்றை அளவிடும் கிளிப்-ஆன் மீட்டர்
(h) விசைமானி (Teachometer)
(i)