Procedure for Renewal of Licence for working a Lift * மின்தூக்கி உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான நடைமுறைகள் *
மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளின் உரிமம் புதுப்பித்தல் (படிவம் ‘F)’:
- மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை இயக்குவதற்கான உரிமத்தை புதுப்பிப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அரசு கருவூலத்தில் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாக மின்னணு முறையில் தொகை செலுத்தும் முறையின் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டதற்கான e-செலுத்துச் சீட்டுடன், உரிமக் காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆய்வாளரிடம் படிவம் “G” - இல் ஆன்லைன் மூலம் www.tnei.tn.gov.in/lift என்ற இணையத்தளத்தின் வாயிலாக சமர்ப்பிக்கபட வேண்டும்
-
- 5 நிறுத்தங்களைக் கொண்ட மின் தூக்கியை பொறுத்த நேர்வில் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)
- 5க்கும் மேற்பட்ட நிறுத்தங்களைக் கொண்ட மின் தூக்கியை பொறுத்த நேர்வில் ரூ.10,000 ( ரூபாய் பத்தாயிரம் மட்டும்)
- ஒவ்வொரு இயங்கும் படிக்கட்டு அமைப்பிற்கும், ரூ. 10,000 ( ரூபாய் பத்தாயிரம் மட்டும்)
கட்டணத்தொகையுடன் உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பமாயின், மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்பின் உரிமையாளர் மற்றும் மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்பு நிறுவனத்திற்கிடையே செய்து கொண்ட ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்தின் நகல் அல்லது உரிமம் வழங்கப்பட்ட அல்லது புதுப்பித்தலுக்கு பின்னர், ஒவ்வொரு ஆண்டுக்காக, தகுதி வாய்ந்த அதிகாரமளிக்கப்பெற்ற நபரிடமிருந்து பெற்ற ஆய்வு அறிக்கைகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு உருவாகுவதற்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட கட்டடங்களுக்காக பதிவு பெற்ற கட்டமைப்பு பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டமைப்பு நிலைத்தன்மை சான்றிதழ் ( பொருந்துமாயின்), மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புகளைப் பயன்படுத்தும் நபர்களுக்கான காப்பீட்டுடன், மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்பு உரிமையாளரால் எடுக்கப்பட்ட காப்பீட்டுப் பத்திரத்தின் நகல் ஆகியவை உரிமக் காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆய்வாளரிடம் அளிக்கப்படவில்லையெனில், ஒவ்வொரு மாதம் அல்லது அதன் பகுதி கால அளவிற்குள்ளாக ஏற்படுகிற காலதாமதத்திற்காக, ஒவ்வொரு மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டு அமைப்புக்காக, உரிமதாரரால், கூடுதல் கட்டணமாக, ரூ.500/- ஐ அரசு கருவூலத்திற்கு www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாக மின்னணு முறையில் தொகை செலுத்தும் முறையின் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டதற்கான e-செலுத்துச்சீட்டு ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கபட வேண்டும்.
மேற்காணும் விதியின் கீழ் கோரப்பட்ட கட்டணத்துடன் விண்ணப்பம் பெறப்பட்டவுடன், ஆய்வாளர், பதினைந்து நாட்களுக்குள் ஆய்வினை மேற்கொள்ள
வேண்டும். மேலும், அவ்விண்ணப்பம் மேற்சொன்ன சட்டவிதித்துறைகள் மற்றும் இந்த விதிகளுக்கு இணக்கமாக உள்ளது என அவர் மனநிறைவடைவராயின், குறைபாடுகளை சரிசெய்தது குறித்து கடிதம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், படிவம் ”F*”- இல், ஆய்வாளர்உரிமத்தை புதுப்பித்து ஆன்லைன் மூலம் வழங்குவார்.
- How to Apply for Renewal of Lift Licence (Form G):
- The Owner of the Place who is licenced to work a lift, shall apply for renewal of licence, 3 months prior to the date of expiry of licence as under
- To Apply Renewal of Lift Licence (Form G), Go to Apply for Renewal (Form G) page. Click Renewal Request for your lift licence number.
- Fill the Form and Attach the AMC agreement copy and Insurance copy. Click submit and Download the generated Form G in View Renewals page and put the signature.
- Click Submit Form G to Upload the signed Form G in View Renewals page and Generate Challan.
- Once paid the amount, upload the copy of challan in Submit Paid Challan page.
-
Check Renewal Lift Licence Status:
- Check the Renewal of Lift Licence status(Form G) in View Renewals page.