தற்போதுள்ள மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டில் புதிதாக இணைப்பதற்கு அல்லது மாற்றங்கள் செய்வதற்காக மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டை நிறுவுவதற்க்கான அனுமதி*Procedure For Obtaining Erection Permission for Lifts and Escalators

Permission to erect a Lift or an Escalator for making additions or alterations to existing Lift or Escalator.-

(1) Every owner of a place intending,-

  1. to erect a Lift or an Escalator in such place; or
  2. to make additions or alterations to existing Lift or Escalator, shall make an application in Form “A” to the Inspector.

Every such application shall be accompanied by one set of drawings duly signed by the applicant showing the following particulars, namely:-

   1. Layout of the lift or escalator erection;
   2. Plan;
   3. Sectional elevation;
   4. Arrangement of car and landing doors for lifts;
   5. Lift well enclosures;
   6. Size and position of the machine relating to the lift well;
   7. Position of hoisting machine for the lift or escalator;
   8. Number of floors to be served and total travel by the lift;
   9. Wiring diagram of the complete electrical installation with all wiring, light points, switch- fuses, control panels and other electrical apparatus, size of wires, earthing scheme with size of earth leads, method of construction of earth electrodes, laying of cables for lift or escalator equipment duly signed by the manufacturer of lift or escalator or company of Electrical and Mechanical Engineers to whom the lift or escalator erection work is entrusted and also signed by the licensed electrical contractor to whom the electrical erection work is entrusted;
   10. Angle of inclination for an escalator;
   11. Type of balustrading in an escalator;
   12. The width between balustrades in an escalator;
   13. Details of handrails, step treads, landing, comb plates, trusses or girders and step wheel tracks  in escalator;
   14. The rated load in kilograms on escalator;
   15. The factor of safety based on the static loads in the lift or escalator;
   16. The additions or alterations proposed to be made in existing Lift or Escalator installation shall be shown  by distinct colour;
   17. Copy of approval obtained from the Urban Local Body concerned for the Building Plan;
   18. A chalan remitted into Government Treasury or by means of electronic payment through the website https://www.tnei.tn.gov.in for a fee of, -
    1. Rs.2,500/- (Rupees Two Thousand and Five Hundred only) in case of lift having 5 landings;
    2. Rs.5,000/- (Rupees Five Thousand only) in case of lift having more than 5 landings;
    3. Rs.10,000/- (Rupees Ten Thousand only) for each Escalator.

How to Apply to Obtain Erection Permission for Lift (Form A):

 1. To Apply for Erection Permission(Form A), Go to Apply Form A page.
 2. Fill all the required fields and click Apply button.
 3. In the preview form, Changes can be done using Go Back button. Otherwise click Print button to print the Form A and put the signature.
 4. Form will be saved. Click Continue to upload the signed Form A and Lift drawings(Optional) or Later you can submit the signed Form A via View Form A List
 5. Select the application number to Generate Challan and pay the amount.
 6. Once paid the amount, upload the copy of challan in Submit Paid Challan page.

Check Lift Erection Permission Status:

 1. Check the Lift Erection Permission Status in Form B Status page.

Apply to Obtain Permission to Operate Lift (Form C D E):

 1. After getting Form B approval and lift erection completed, Go to Apply Form C D E page.
 2. To Generate Work Completion Report of the Manufacturer(Form D), Click Generate Form D & select the Generate option for particular lift reference number.
 3. Fill all the fields in Form D and Click Submit.
 4. Download the Form D and Get signature from Manufacturer directly or Click Allow & Send Notification to Manufacturer to Generate Form page to get signature via online.
 5. To Generate Completion Report from Licenced Contractor (Form E), Click Generate Form E & select the Generate option for particular lift reference number.
 6. Fill all the fields in Form E and Click Submit.
 7. Download the Form E and Get signature from Electrical Contractor directly or Click Allow & Send Notification to Electrical Contractor to Generate Form page to get signature via online.
 8. After completing Form D & E process, To Generate Notice Intimating the Completion of the Lift Erection (Form C) Click Generate Form C page to apply Form C and Generate the challan and pay the amount. Once paid the amount, upload the copy of challan in Submit Paid Challan page.
 9. To Submit all the generated Forms(Form C D E), Go to Intimate Completion page & Select the application number and Upload Form C D E along with Insurace Policy.

Check New Lift Licence Status (Form F):

 1. Check the Lift Licence status(Form F) in Lift Licence & Queries page.

 

தற்போதுள்ள மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டில் புதிதாக இணைப்பதற்கு அல்லது மாற்றங்கள் செய்வதற்காக மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டை நிறுவுவதற்க்கான அனுமதி: (படிவம்‌ ‘B’)

 1. (a) மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டை நிறுவுவதற்கு அல்லது தற்போதுள்ள மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டில்‌ கூடுதலாக இணைக்க அல்லது மாற்றம்‌ செய்ய கருதுகிற இடத்தின்‌ ஒவ்வொரு உரிமையாளரும்‌ படிவம்‌ ‘A’-இல்‌ ஆய்வாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்‌.

(b) அத்தகைய ஒவ்வொரு விண்ணப்பத்துடனும்‌, விண்ணப்பதாரரால்‌ உரிய முறையில்‌ கையொப்பமிடப்பட்ட பின்வரும்‌ விவரங்களைக்‌ கொண்ட வரைபடங்கள்‌ ஆன்லைனலில், www.tnei.tn.gov.in/lift என்ற இணையத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்‌, அவையாவன:-

 

 1. மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டு அமைப்பை நிறுவுவதற்கான திட்ட வடிவமைப்பு
 2. திட்ட வரைபடம்‌
 3. பகுதிக்கான குத்துயரம்‌
 4. மின்‌ தூக்கிகளுக்கான கார்‌ மற்றும்‌ லேண்டிங்‌ கதவுகள்‌ ஏற்பாட்டுமுறை
 5. மின்‌ தூக்கிச்‌ சுவர்‌ இணைப்புகள்‌
 6. மின்‌ தூக்கிச்‌ சுவருடன்‌ தொடர்புடைய இயந்திரத்தின்‌ அளவு மற்றும்‌ நிலை
 7. மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டிற்கான இயந்திரத்தை மேல்நோக்கித்‌ தள்ளும்‌ நிலை
 8. பயன்பாட்டுத்‌ தளங்களின்‌ எண்ணிக்கை மற்றும்‌ மின்‌ தூக்கியின்‌ மொத்த பயணம்‌
 9. மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டுகளை தயாரிக்கும்‌ நிறுவனத்தால்‌ அல்லது நிறுவும்‌ பணி ஒப்படைக்கப்பட்ட மின்னணு மற்றும்‌ இயந்திர பொறியாளரின்‌ நிறுவனத்தாலும்‌ மற்றும்‌ மின்சாரம்‌ இணைப்புப்‌ பணி ஒப்படைக்கப்பட்ட உரிமம்‌ பெற்ற மின்‌ ஒப்பந்ததாரராலும்‌ உரியவாறு கையொப்பமிடப்பட்ட மின்‌ கம்பி இணைப்புகள்‌, விளக்கு பொருத்தப்படுமிடங்கள்‌, மின்விசை உருக்குக்கம்பி, கட்டுப்பாட்டுச்‌ சட்டங்கள்‌, மற்றும்‌ ஏனைய மின்‌ சாதனங்கள்‌, மின்‌ கம்பிகளின்‌ அளவு, மின்‌ முற்றாக்கக்‌ காரீயத்தின்‌ அளவுடன்‌ கூடிய மின்‌ முற்றாக்கத்‌ திட்டம்‌, மின்‌ முற்றாக்க மின்வாய்‌ அமைப்பு முறை, மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டிற்கான கம்பிவடங்களை அமைக்கும்‌ முறை ஆகியவைகளைக்‌ கொண்டுள்ள மொத்த மின்‌ அமைப்புகளின்‌ மின்சுற்று வரைபடம்‌.
 10. இயங்கும்‌ படிக்கட்டின்‌ சாய்தளக்‌ கோணம்‌
 11. இயங்கும்‌ படிக்கட்டின்‌ கைப்பிடிச்சுவரின்‌ வகை
 12. இயங்கும்‌ படிக்கட்டிலுள்ள கைப்பிடிச்சுவர்களுக்கிடையேயான அகலம்‌
 13. கைப்பிடிகள்‌, படிக்கட்டுகள்‌, இறங்கு தளங்கள்‌, கூரை தட்டுக்கள்‌, உத்திரங்கள்‌, எஃகு கட்டுமானச்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ படிக்கட்டுச்‌ சக்கர தடம்‌
 14. இயங்கும்‌ படிக்கட்டின்‌ நிறையிடப்பட்ட சுமை அளவு, கிலோகிராமில்‌
 15. மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டில்‌ உள்ள நிலையான சுமையின்‌ அடிப்படையிலான பாதுக்கப்பு காரணி
 16. தற்போதுள்ள மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டில்‌ செய்யக்‌ கருதப்பட்டுள்ள புதிய இணைப்புகள்‌ அல்லது மாற்றங்களை தனித்தனி நிறத்தில்‌ குறிப்பிட வேண்டும்‌
 17. கட்டட வரைபடத்திற்காக நகர உள்ளாட்சி மன்றத்திடமிருந்து பெறப்பட்ட அனுமதியின்‌ நகல்‌
 18. அரசு கருவூலத்தில்,‌ www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தின்‌ வாயிலாக மின்னணு முறை வாயிலாக கட்டணம்‌ செலுத்தப்பட்டதற்கான e-செலுத்துச்சீட்டு

(a) 5 நிறுத்தங்களைக்‌ கொண்ட மின்‌ தூக்கியை பொறுத்த நேர்வில்‌, ரூ.2500/- (ரூபாய்‌ இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்‌)

(b) 5 க்கும்‌ மேற்பட்ட நிறுத்தங்களைக்‌ கொண்ட மின்‌ தூக்கியை பொறுத்த நேர்வில்‌, ரூ.5000/- (ரூபாய்‌ ஐந்தாயிரம்‌ மட்டும்‌)

(c) ஒவ்வொரு இயங்கும்‌ படிக்கட்டு அமைப்பிற்கும்‌ ரூ.10,000/- (ரூபாய்‌ பத்தாயிரம்‌ மட்டும்‌)

 1. புதிய இணைப்புகள்‌ அல்லது மாற்றங்கள்‌ செய்ய கருதப்பட்டுள்ள தற்போதுள்ள மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டுகள்‌ உள்ள கட்டடங்கள்‌ அல்லது புதிய மின்‌ தூக்கிகள்‌ அல்லது இயங்கும்‌ படிக்கட்டுகள்‌ நிறுவப்படவிருக்கும்‌ கட்டடங்களுக்காக, நகர உள்ளாட்சி மன்றம்‌ உருவாக்கப்படுவதற்கு முன்னர்‌ கட்டப்பட்ட கட்டடங்களுக்கான பதிவுப்பெற்ற கட்டுமான பொறியாளர்களிடமிருந்து பெறப்பட்ட கட்டுமான உறுதி சான்றிதழ்.
 1. 1997 ஆம் ஆண்டு மின்‌ தூக்கி அல்லது இயங்கும்‌ படிக்கட்டுகளுக்கான விதிகளில், விதி 3(1)- ன்‌ கீழ்‌ விண்ணப்பம்‌ பெறப்பட்டதன்‌ பேரில்‌, தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்‌, விண்ணப்பம்‌ பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌, ஆய்வாளர்‌, படிவம்‌ 'A'-இல்‌ கூடுதல்‌ விவரங்களை அளிக்குமாறு விண்ணப்பதாரரைக்‌ கேட்டுக்கொள்வதுடன்‌ படிவம்‌ 'B'-இல்‌ அனுமதியளிப்பார் அல்லது விண்ணப்பித்ததற்கான அனுமதியை நிராகரிப்பார்‌.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்  நடைமுறைகள்

மின்‌ தூக்கிகள் அல்லது இயங்கும்‌ படிக்கட்டுகளை நிறுவுவதற்க்கான அனுமதி:

 1. மின்தூக்கிஅல்லது இயங்கும்‌ படிக்கட்டுகள்  நிறுவுதல் அனுமதிக்கு (படிவம்-“A”) விண்ணப்பிக்க, விண்ணப்ப (படிவம்-“A”) - ன் பக்கத்திற்குச் செல்லவும். (Apply Form A )
 2. தேவையான அனைத்து புலங்களையும் நிரப்பி, பயன்பாட்டு பொத்தானை சொடுக்கவும் (கிளிக் செய்க).
 3. முன் பக்க படிவத்தில், கோ பேக் (GO back) பொத்தானைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்யலாம். இல்லையெனில் படிவம்-A - யினை அச்சிடு பொத்தானைக் சொடுக்கி  (கிளிக் செய்து) கையொப்பம் இடவும்.
 4. கையொப்பமிடப்பட்ட படிவம்-A மற்றும் மின்தூக்கி வரைபடங்களை பதிவேற்ற தொடரவும் என்பதைக் சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) அல்லது கையொப்பமிட்ட படிவம்- A - யினை (View Form A List) என்ற இணைப்பின் வழியாகவும் சமர்ப்பிக்கலாம்
 5. சலான் உருவாக்க விண்ணப்ப எண்ணைத் தேர்ந்தெடுத்து தொகையை www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தின்‌ வாயிலாக மின்னணு முறை மூலம் செலுத்தி, இ-செலானை பதிவிறக்கவும்
 6. பதிவிறக்கிய இ-செலானை, ‘செலுத்தப்பட்ட சலான் சமர்ப்பிப்பு பக்கத்தில்’ (Submit Paid Challan) பதிவேற்றவும்.

மின்தூக்கிகள் அல்லது இயங்கும்‌ படிக்கட்டுகளுக்கு (படிவம் ஏ) நிறுவுதல் அனுமதியின்  நிலையை சரிபார்க்கவும்:

 1. மின்தூக்கிகள் (படிவம்-“A”) க்கு நிறுவுதல் அனுமதி  நிலையை Form B Status என்ற இணைப்பின் வழியாக சரிபார்க்கவும்: