மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை இயக்குவதற்க்கான உரிமம்: (படிவம் ‘F’)
-
- 1997 ஆம் ஆண்டு மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளுக்கான விதிகளில், 3-ஆம் விதியின் கீழ் மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை நிறுவுவதற்கு அனுமதி பெற்றுள்ள அத்தகைய இடத்தின் ஒவ்வொரு உரிமையாளரும், மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை நிறுவுகிற அத்தகைய பணி நிறைவடைந்ததன் பேரில், ஆய்வாளரிடம் அறிவிப்பு ஒன்றை அளிப்பதுடன், உரிமத்திற்கான விண்ணப்பம் ஒன்றினையும் அளிக்க வேண்டும். மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை நிறுவுதல் முடிவடைந்ததற்கான அறிவிப்பு மற்றும் உரிமம் கோருவதற்கான விண்ணப்பம் கீழ்க்காணும் இணைப்புகளுடன் படிவம் “C” -இல் அளிக்கப்பட வேண்டும்.
(a) நேர்வுகேற்ப, மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளின் தயாரிப்பாளர்களிடமிருந்து அல்லது மின் பொறியாளர்கள் மற்றும் இயந்திர பொறியாளர்கள் ஆகியோரின் நிறுவனத்திடமிருந்து படிவம் “D”- இல் பெறப்பட்ட மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை நிறுவுதல் குறித்த பணி நிறைவு அறிக்கை
(b) உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரரிடமிருந்து படிவம் “E”-இல் பெறப்பட்ட நிறைவு அறிக்கை
(c) கீழ்க்காணும் கட்டணத்தொகையில், அரசு கருவூலத்தின் e-செலுத்துச் சீட்டு
- 5 நிறுத்தங்களைக் கொண்ட மின் தூக்கியை பொறுத்த நேர்வில் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)
- 5 க்கும் மேற்பட்ட நிறுத்தங்களைக் கொண்ட மின் தூக்கியை பொறுத்த நேர்வில் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)
- ஒவ்வொரு இயங்கும் படிக்கட்டு அமைப்பிற்கும், ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)
(d) மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுகளை பயன்படுத்தும் நபர்களுக்கான காப்பீட்டுடன், மின் தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டுக்கான உரிமையாளரால் எடுக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் நகல்
-
- மேற்காணும் விதியின் கீழ் விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், ஆய்வாளர் பதினைந்து நாட்களுக்குள் மின்தூக்கி அல்லது இயங்கும் படிக்கட்டினை ஆய்வு செய்தற்கான ஏற்பாட்டுமுறையினை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவ்விண்ணப்பம், சட்டவிதித்துறைகள் மற்றும் இந்த விதிகளுக்கு இணக்கமாக உள்ளது என அவர் மனநிறைவடைவராயின், கடிதம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், படிவம் “F”-இல், ஆய்வாளர் ஆன்லைன் மூலம் உரிமம் வழங்குவார்.